மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது வில்லியனூரில் போலீஸ் ரோந்து பணியின் போது சிக்கினர்
வில்லியனூர் பகுதியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 240 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வில்லியனூர்,
வில்லியனூர் பகுதியில் பள்ளி, கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுபற்றி நடவடிக்கை எடுக்க மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் வில்லியனூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிநாராயணன், போலீசார் எழில்ராஜன், அர்ச்சுனன், கவியரசன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும் படியாக நின்ற 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து அவர்களை சோதனை செய்தபோது, தலா 10 கிராம் எடை கொண்ட 22 கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். விசாரணையில் ஜி.என்.பாளையத்தை சேர்ந்த விஜயரங்கம் மகன் பரத்குமார் என்கிற சரவணன் (வயது 24), மனோகர் மகன் ரமேஷ் என்கிற மனோ (22) என்பது தெரியவந்தது. இவர்கள் முத்தியால்பேட்டையில் உள்ள டிராக் சிவா மற்றும் சென்னையில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, சிறிய பொட்டலங்களாக பிரித்து இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். அவர்கள் கூறிய தகவலின் பேரில் பரத்குமார் தங்கியிருந்த வாடகை வீட்டில் இருந்து 80 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story