முதுகுளத்தூர் அருகே இளங்காக்கூர்-பொக்கனாரேந்தல் சாலை பணிகள் பாதியில் நிறுத்தம்


முதுகுளத்தூர் அருகே இளங்காக்கூர்-பொக்கனாரேந்தல் சாலை பணிகள் பாதியில் நிறுத்தம்
x
தினத்தந்தி 19 July 2018 11:00 PM GMT (Updated: 19 July 2018 6:08 PM GMT)

முதுகுளத்தூர் அருகே இளங்காக்கூர்-பொக்கனாரேந்தல் சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் தாலுகா தேரிருவேலியில் இருந்து இளங்காக்கூர் வழியாக பொக்கனாரேந்தல் செல்லும் சாலை ரூ.2 கோடி மதிப்பீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

ஆனால் இந்த சாலையில் பாலம் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


எனவே இந்த பாலத்தை முழுமையாக கட்டி சாலை பணிகளை முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொக்கனாரேந்தல் முன்னாள் ஊராட்சி தலைவி வாசுகி கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story