ஓடும் பஸ்சில் செல்போன் பறிப்பில் ஈடுபட முயன்ற 2 பேர் கைது


ஓடும் பஸ்சில் செல்போன் பறிப்பில் ஈடுபட முயன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 July 2018 1:26 AM IST (Updated: 21 July 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் பயணிகளிடம் 2 பேர் செல்போன் பறிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவொற்றியூர்,

மீஞ்சூரில் இருந்து சென்னை பாரிமுனைக்கு நேற்று காலை மாநகர பஸ்(தடம் எண் 56 பி) வந்து கொண்டிருந்தது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் எல்லையம்மன் கோவில் அருகே வந்தபோது, ஓடும் பஸ்சில் பயணிகளிடம் 2 பேர் செல்போன் பறிக்க முயன்றனர். பயணிகள் கூச்சலிட்டதால் 2 பேரும் பஸ்சில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடினர்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள், 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து திருவொற்றியூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், தண்டையார்பேட்டையை சேர்ந்த ரமேஷ்(வயது 22), எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சரத்குமார்(23) என்பது தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 2 செல்போன்களை கைப்பற்றினர். 

Next Story