தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிதாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்
திருத்துறைப்பூண்டி தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிதாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பெரியநாயகிபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீவிபத்தில் 45 வீடுகளும், மீனாட்சி வாய்க்கால் பகுதியில் 7 வீடுகளும், வேப்்பஞ்சேரியில் 6 வீடுகளும் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அமைச்சர் காமராஜ், தீவிபத்து நடந்த இடங்களுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசின் நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீயில் எரிந்து போன வீட்டின் பட்டா, பள்ளி சான்றிதழ்கள் மற்றும் குடும்ப அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவைகள் விரைவில் வழங்கப்படும். அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும். தீவிபத்து நடைபெற்ற பகுதியில் முகுாம் அமைத்து மக்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்தையும் பெற்று தரும் வகையில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ.118 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறுவை, சம்பா சாகுபடிக்கு தேவையான விதைகள், உரம்,பூச்சிக்கொல்லி மருந்து, மற்றும் இடுபொருட்கள் அனைத்தும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவை விவசாயிகளுக்கு தேவைகேற்ப வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். இதில் அ.தி.மு.க. நகர செயலாளர் சண்முகசுந்தர், ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு, முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், முன்னாள் நகர மன்ற தலைவர் உமாமகேஷ்வரிகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் பாலதாண்டயுதம், திருத்துறைப்பூண்டி தாசில்தார் மகேஷ் குமார், நகராட்சி ஆணையர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story