ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா மும்பை வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரெயில் மேற்கு ரெயில்வே அறிவிப்பு
ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு மும்பை வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது.
மும்பை,
ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு மும்பை வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது.
சிறப்பு கட்டண ரெயில்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா வருகிற 29ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பர் மாதம் 8ந்தேதி வரை நடக்கிறது.
இந்த விழாவில் மும்பையில் இருந்து திரளானோர் சென்று கலந்து கொள்வார்கள். இவர்களின் வசதிக்காக மேற்கு ரெயில்வே வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்குகிறது.
இதன்படி ஆகஸ்டு 27ந் தேதி பாந்திரா ெடர்மினசில் இருந்து இயக்கப்படும் சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண் 09041) இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு 29ந்தேதி மதியம் 1.20 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து இயக்கப்படும் சிறப்பு கட்டண ரெயில்(09042) 29ந்தேதி இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு 31ந்தேதி காலை 10.30 மணிக்கு பாந்திரா டெர்மினசை வந்தடையும்.
நின்று செல்லும் இடங்கள்
இருமார்க்கத்திலும் இந்த ரெயில் போரிவிலி, வசாய்ரோடு, கல்யாண், ேலானவாலா, புனே, டாவுன்ட், சோலாப்பூர், குல்பர்கா, வாடி, யாட்கிர், ராய்ச்சூர், மந்திராலயம் ரோடு, அதோனி, குண்டக்கல், கூட்டி, தாதிபத்ரி, முட்டனுரு, எரகுண்டலா, கடப்பா, ரசாம்பேட்டா, கோடுரு, ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், கடலூர் போர்ட், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
பாந்திரா டெர்மினசில் இருந்து செல்லும் ரெயிலுக்கான முன்பதிவு இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த தகவலை ேமற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story