சேவூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.77½ லட்சத்தில் பள்ளி கட்டிடம் கட்டும் பணி: அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு


சேவூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.77½ லட்சத்தில் பள்ளி கட்டிடம் கட்டும் பணி: அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு
x
தினத்தந்தி 21 July 2018 4:30 AM IST (Updated: 21 July 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

சேவூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.77½ லட்சத்தில் பள்ளி கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

ஆரணி, 

ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.77 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்கும்படி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பன்னீர்செல்வம், உதவி செயற் பொறியாளர் செல்வகுமார், ஒப்பந்ததாரர் பழனிவேல் ஆகியோரிடம் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி கே.மோகன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் வக்கீல் கே.சங்கர், சாந்திசேகர், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கே.பெருமாள், ஜெயலலிதா பேரவை நிர்வாகி பாரி பி.பாபு உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story