அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...!
இன்று (ஜூலை 21-ந்தேதி) நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நினைவு தினம்.
கலைத்தாயின் தவப்புதல்வரான நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தமிழ் திரையுலக பல்கலைக்கழகம் என போற்றப்படுபவர். நடிப்பின் இமயமான அவர் தான் ஏற்றுக் கொண்டு நடித்த கதாபாத்திரங்களோடு ஒன்றிப்போய், உணர்வுப்பூர்வமான வசன உச்சரிப்பாலும், வசனத்துக்கேற்ற உடல் மொழியாலும் தமிழ் திரையுலக ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர்.
300 படங்களில் கதாநாயகன், 20 படங்களில் இரட்டை வேடம், 5 படங்களில் மூன்று வேடம், ஒரு படத்தில் 9 வேடங்கள் பூண்டு தன் விசுவரூப நடிப்பாற்றலால் திரையுலகை வியக்க வைத்த கலைஞானி சிவாஜிகணேசன். தொடக்க காலத்தில் நாடகத்தில் நடித்துக்கொண்டு இருந்த வி.சி.கணேசன் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகத்தில் சிறப்பாக நடித்தார். அதைப் பார்த்து வியந்த பெரியார் ‘சிவாஜியாக ரொம்ப நன்றாக நடித்தாய். இன்று முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி’ என்று வாழ்த்தினார். அதுவரை வி.சி.கணேசன் என்று அழைக்கப்பட்டவர் சிவாஜி கணேசன் ஆனார்.
சிவாஜிகணேசன் பற்றி மறக்க முடியாத சில மலரும் நினைவுகளை பற்றி அவரது மகனும் நடிகருமான பிரபு மனம் திறக்கிறார்:-
அப்பாவுடன் வாழ்ந்த காலம் பொற்காலம். அப்பாவிடம் எல்லோரும் வியந்து பாராட்டும் நற்பண்புகள் அதிகம் உண்டு. அதே பண்புகளைத் தான் எங்களுக்கும் கற்று தந்து இருக்கிறார். அவர் குடும்பத்தை மிகவும் நேசித்தார். எப்போதும் கூட்டுக்குடும்பமாக வாழ வேண்டும் என்று அறிவுறுத்துவார். உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் அதிக முக்கியத்துவம் தந்தார்.
குடும்பத்தைப் போல நண்பர்கள் மீதும் அதிகம் பாசம் கொண்டிருந்தார். தன்னை ரசிக்கும் ரசிகர்கள் மீதும் எல்லையற்ற அன்பு வைத்திருந்தார்.
வருடந்தோறும் அப்பாவோடும், குடும்பத்தோடும் பொங்கலை கொண்டாடும் அந்த நாட்களை எண்ணிப் பார்க்கிறேன். அப்பாவுக்கு மிகவும் பிடித்த பண்டிகை பொங்கல் தான். தமிழர் திருநாள் என்பதால், அதற்கு அதிக முக்கியத்துவம் தருவார்.
பொங்கலை கொண்டாட சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டைக்கு குடும்பத்தை அப்பா சிவாஜி கணேசன், பெரியப்பா தங்கவேல், சித்தப்பா சண்முகம் ஆகியோர் அழைத்துச்செல்வார்கள்.
சூரக்கோட்டையில் எங்களுக்கு சொந்தமான பெரிய பண்ணை உள்ளது. எங்கள் குடும்பத்தின் சொர்க்கபுரி அந்த பண்ணைதான். வருடந்தோறும் பொங்கல் கொண்டாட்டம் அங்கே தான் நடைபெறும். கூட்டுக்குடும்பமாக சூரக்கோட்டை பண்ணையில் பொங்கலை கொண்டாடும்போது கிடைக்கும் இன்பம் அலாதியானது.
நாங்கள் அப்பாவை சிவாஜியப்பா என்றுதான் கூப்பிடுவோம். பெரியப்பாவை தங்கவேலப்பா என்றழைப்போம். பேரக்குழந்தைகள் மீசைத் தாத்தா என்று கூப்பிடுவார்கள். சித்தப்பா சண்முகம் லண்டன் சென்று படித்தவர். இதனால் அவரை நாங்கள் சண்முகம் அங்கிள் என்போம். பேரக் குழந்தைகளோ ஆபீஸ் தாத்தா என்று அழைப்பார்கள்.
இந்த சிறுவர்கள், இளசுகள், பெரியவர்கள் என குடும்பம் மொத்தமும் சூரக்கோட்டை செல்லும்போது கிடைக்கும் உற்சாகத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் கொஞ்சமும் பஞ்சம் இருக்காது.
சூரக்கோட்டையில் பொங்கல் கொண்டாட்டம் தொடங்கும். அனைவரும் தமிழர் பாரம்பரிய முறைப்படி புத்தாடைகள் அணிந்துகொள்வோம். தமிழர் பண்டிகை என்பதால், தீபாவளியை விட சிறப்பாக கொண்டாட அப்பா விரும்புவார். பட்டாசு வெடித்து மகிழ்வோம். எங்களோடு கொண்டாட்டத்தில் அப்பாவின் ரசிகர்களும், ஊரில் உள்ள சொந்த பந்தங்களும் பங்கெடுத்துக்கொள்வார்கள். 500 முதல் ஆயிரம் பேர் வரை அங்கு கூடுவார்கள்.
மாட்டுப்பொங்கல் அன்று மாட்டுப் பண்ணையில் இருக்கும் மாடுகளை குடும்பத்தினர் ஒவ்வொருவரும் பிடித்துக்கொண்டு பக்கத்தில் இருக்கிற பெருமாள் கோவிலுக்கு செல்வோம். அந்த பெருமாள் கோவில் எங்கள் நிலத்துக்குள்தான் அமைந்துள்ளது.
மாடுகளை பிடித்து செல்லும்போது முட்டிவிடுமோ என்ற அச்சம் ஒருபக்கம் எங்களுக்கு இருக்கும். அதனால் பண்ணை வேலையாட்களும் எங்கள் கூடவே பாதுகாப்புக்காக வருவார்கள்.
பெருமாள் கோவில் சென்றதும், வீட்டுப் பெண்கள் எல்லோரும் பூஜை செய்வார்கள். காளைகளுக்கு மாலை அணிவித்து, சந்தனம், பொட்டு வைத்து வணங்குவோம். மேள, தாளங்கள் முழங்க மாட்டுப்பொங்கலை சிறப்பாக கொண்டாடுவோம்.
எங்கள் குடும்பத்தில் ஆண்கள் பெங்களூருவில் தங்கி படித்தோம், பெண்கள் சென்னையில் படித்தார்கள். அந்த நேரத்தில் அப்பா ‘சூட்டிங்’கில் மும்முரமாக இருப்பார். இதனால் அவருடன் நேரம் செலவிடவே முடியாது. ரொம்ப வருத்தமாக இருக்கும். அப்பாவும் எங்களை பார்க்க விரும்புவார். ஆனால் அவரின் வேலைச் சுமை அதற்கு இடம் அளிக்காது.
இதனால் தான் சூரக்கோட்டையில் குடும்பத்தோடு கொண்டாடும் பொங்கலை பெரிதும் விரும்புவோம். சூரக்கோட்டையில் கழியும் ஒவ்வொரு நொடியும் உணர்வுப்பூர்வமானதாக இருக்கும். எல்லையற்ற கொண்டாட்டம் இருக்கும்.
எங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க அப்பா ஆசைப்படுவார். அதற்காக பல காரியங்களை செய்வார். அப்பா அருமையாக கட்ட வண்டி ஓட்டுவார். நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது, பொங்கல் நாட்களில் எங்களையும் ஏற்றிக்கொண்டு பண்ணைக்குள் கட்ட வண்டியில் வலம் வருவார்.
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வெள்ளையம்மாள் என்ற யானையை அப்பா வழங்கி இருந்தார். அந்த யானை சமீபத்தில் தனது 65-வது வயதில் இறந்தது. முன்பு அந்த யானையையும் பொங்கல் விழாவுக்காக கோவிலில் இருந்து எங்கள் பண்ணைக்கு அனுப்பி வைப்பார்கள். நாங்கள் யானை மீது சவாரி சென்று குதூகலிப்போம்.
பண்ணைக்கு பக்கத்தில் ஒரு குளம் உண்டு. அதில் இறங்கி மீன் பிடித்து மகிழ்வோம். ஆனால் மீன்களை சமைத்து சாப்பிட மாட்டோம். அதற்கு அப்பா அனுமதிக்கமாட்டார். அவற்றை உயிரோடு பிடித்து குழந்தைகளிடம் காட்டுவோம். பிறகு மீண்டும் தண்ணீருக்குள்ளேயே விட்டுவிடுவோம். அந்த நாட்கள் மிகவும் மகிழ்ச்சியானவை.
எங்களோடு பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கெடுக்கும் உறவினர்கள், அப்பாவின் ரசிகர்கள் அனைவருக்கும் பண்ணையில் தடபுடலான மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். அவர்களை அப்பா கனிவோடு உபசரிப்பார். அவர்கள் அனைவருக்கும் வணக்கம் சொல்லி வரவேற்க அப்பா கற்றுக்கொடுத்து இருக்கிறார். பெரியவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று எப்போதும் சொல்வார்.
பொங்கல் கொண்டாட்டத்துக்காக சூரக்கோட்டை செல்வதற்கு முன்பு, வேலூரில் உள்ள பி.ஏ.பெருமாள் முதலியார் வீட்டுக்கு செல்வோம். பராசக்தி திரைப்படத்தை தயாரித்தவர்களில் அவர் ஒருவர். பராசக்தி படத்தில் அப்பா கதாநாயகனாக நடிப்பதற்கு அவர் தான் காரணம். மற்றவர்களோடு சண்டையிட்டு அப்பாவை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். படம் மாபெரும் வெற்றி பெற்றது.
பி.ஏ.பெருமாள் முதலியாரின் பேருதவியை அப்பா எப்போதும் நினைவில் வைத்திருந்தார். அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக அவருடைய வீட்டுக்கு அழைத்துச்செல்வார். அவரிடம் ஆசீர்வாதம் பெறுவார். அப்பா இறந்த பிறகு நான் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தில் பி.ஏ.பெருமாள் முதலியார் இல்லத்துக்கு செல்வதை வழக்கத்தில் வைத்து இருந்தேன். அவரோடு சேர்ந்து உணவு அருந்துவோம்.
சூரக்கோட்டை செல்லும்போதும் சரி, அங்கிருந்து திரும்பும்போதும் சரி இடையில் மரங்கள் அடர்ந்த சாலையோரம் வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுப்போம். அங்கேயே ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். அது ஒரு வசந்த காலம்.
அப்பாவோடு செலவிட்ட அந்த காலத்தை இப்போதும் எண்ணி கண் கலங்குவது உண்டு.
- நடிகர் பிரபு

Related Tags :
Next Story