டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி


டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 22 July 2018 4:30 AM IST (Updated: 21 July 2018 10:39 PM IST)
t-max-icont-min-icon

டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கும்பகோணத்தில் ஜி.கே.வாசன் கூறினார்.

கும்பகோணம்,


கும்பகோணத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொள்ள த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வந்திருந்தார். விழாவில் கலந்து கொண்ட அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

டெல்டா பாசனத்துக்காக கல்லணை நாளை(இன்று) திறக்கப்பட உள்ளது. தமிழக அரசு ஏரி, குளங்களை தூர்வாரும் பணியை முறையாக செய்யவில்லை. டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல தமிழக அரசு முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை உடனடியாக இலவசமாக வழங்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

எனவே விவசாயிகளுக்கு புதிய கடன்கள் வழங்க வேண்டும். மேட்டூர் அணை நீர்மட்டம் 110 அடியை தாண்டி உள்ளது. மேட்டூர் அணை தண்ணீர் கடலில் வீணாக கடலில் கலப்பதை தடுத்து சேமிக்க அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறுஅவர் கூறினார்.

பேட்டியின்போது த.மா.கா மாவட்ட தலைவர் ஏ.ஜிர்ஜிஸ், நகர தலைவர் பி.எஸ்.சங்கர், செயலாளர் சாதிக்அலி மற்றும் பலர் இருந்தனர்.


Next Story