பெட்ரோல், டீசல் விலையை உயர்வை கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலையை உயர்வை கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 July 2018 4:30 AM IST (Updated: 21 July 2018 11:17 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலையை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். பிரகாஷ், மல்லீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோரிக்கைகளை குறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அழகர்சாமி விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அவற்றின் விலையை தீர்மானிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு ஏற்று நடத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். வாகன காப்பீடு கட்டண உயர்வை மத்திய அரசு வாபஸ் வாங்க வேண்டும். புதிய சாலை பாதுகாப்பு மசோதாவை கைவிட வேண்டும். ஆட்டோ ஓட்டும் தொழிலாளிக்கு பெட்ரோல், டீசல் மானிய விலையில் வழங்கிட வேண்டும்.

வீட்டு வசதி வாரியம் மூலம் ஆட்டோ தொழிலாளிக்கு தொகுப்பு வீடு வழங்கவும், வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கிடவும் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அம்பேத்கர் சிலைக்கு பின்புறம் சாலையை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடத்தை இடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும், அப்புறப்படுத்தாத நகராட்சி நிர்வாகத்தையும், நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தையும் கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் ஆட்டோ சங்க கிளை நிர்வாகிகள், பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. அனைத்து வகையான வாகன டிரைவர்கள், தொழிலாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story