பொதுமக்கள் பங்களிப்புடன் தன்னிறைவு திட்டப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம், கலெக்டர் லதா தகவல்


பொதுமக்கள் பங்களிப்புடன் தன்னிறைவு திட்டப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம், கலெக்டர் லதா தகவல்
x
தினத்தந்தி 22 July 2018 3:15 AM IST (Updated: 22 July 2018 12:09 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் தன்னிறைவு திட்டப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் 2018–19–ம் ஆண்டுக்கான தன்னிறைவு திட்டம் செயல்பாட்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி தன்னிறைவு திட்டத்தின்கீழ் பணிகளை எடுத்துச் செய்வதற்கான தேவை குறித்த கருத்து, தனிநபர், குழுக்கள், நிறுவனங்கள், பொது அல்லது தனியார் நிறுவனங்கள் அல்லது சமுதாயம் ஆகியவற்றின் மூலமாக பொதுமக்கள் பங்களிப்புடன் உருவாக்கிட விண்ணப்பங்கள் கோரிக்கை வடிவில் வரவேற்கப்படுகின்றன. அவ்வாறு கோரப்படும் பணிகளுக்கான மதிப்பீட்டு தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கு குறையாமல் பொது மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் எடுத்துச் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்ட பணிகளின் பட்டியல், வரையறுக்கப்பட்ட நிபந்தனைகள், தடை செய்யப்பட்ட பணிகள், பணிகளை நிறைவேற்றுதல் குறித்த விவரங்கள் Smart Sivaganga என்ற செயலி மற்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கோரப்படும் பணிகளை அப்பணிகளின் அத்தியாவசிய தேவை மற்றும் அதை நடைமுறைப்படுத்தக்கூடிய சாத்தியக் கூறுகள் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கிணங்க மாவட்ட கலெக்டர் உறுதி செய்வார்.

இத்திட்டத்தின்கீழ் அனுமதி வழங்க ஏதுவாக விண்ணப்பங்களில் கோரப்படும் பணிகள் விவரத்துடன், செலுத்த வேண்டிய உரிய தொகைக்கான கேட்பு வரைவோலையை மாவட்ட கலெக்டர் மற்றும் தலைவர் என்ற பெயரில் எடுத்து சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர், அல்லது கலெக்டரிடம் வழங்க வேண்டும். மேலும் இதுகுறித்த விவரங்களை சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அல்லது நகராட்சிகள் அல்லது பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பொதுப்பணித்துறை, முதன்மைக்கல்வி அலுவலர், இணை இயக்குனர்(சுகாதார பணிகள்) ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story