நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தில் சிவாஜி உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை


நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தில் சிவாஜி உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 22 July 2018 3:30 AM IST (Updated: 22 July 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தில் சிவாஜி உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நெல்லை, 

நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தில் சிவாஜி உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நினைவு தினம்

நடிகர் சிவாஜியின் 17–வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சிவாஜியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டது. அந்த படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், சிவாஜி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் முரளிராஜா, மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், ராமேசுவரன், பொன்.ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் உதயகுமார், மண்டல தலைவர் தனசிங் பாண்டியன், மாவட்ட பொது செயலாளர்கள் சொக்கலிங்க குமார், சிவாஜி கலைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவாஜி மன்றம்

இதே போல் நெல்லை மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் மன்ற அலுவலகத்தில் சிவாஜி உருவ படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நெல்லை மாவட்ட சிவாஜி மன்ற தலைவர் சிவாஜி செல்வராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் லெட்சுமணன், பொருளாளர் இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நெல்லை மாவட்ட பிரபு மன்ற தலைவர் பாலசந்தர், விக்ரம் பிரபு மன்ற தலைவர் கணேசன், நிர்வாகிகள் சீனிவாசன், மாரியப்பன், ராஜாமணி, ஜெயசங்கர், சிவாஜி மோகன், மீனாட்சி சுந்தரம், சிவாஜி ஸ்ரீதர், சிவாஜி அரிராம், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி மற்றும் சிவாஜி ரசிகர்கள் சார்பில் சிவாஜி உருவ படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story