கவர்னர் கார் மீது மோதிய வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்கப்பட்டார்
கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்ற கார் மீது மோதிய வழக்கில், அரசு பஸ் டிரைவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
அன்னவாசல்,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அன்று மாலை 5 மணி அளவில் அங்கிருந்து காரில் திருச்சிக்கு புறப்பட்டார்.
திருக்கோகர்ணம் அருகே முத்துடையான்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற ஒரு அரசு பஸ் திடீரென கவர்னர் அமர்ந்து இருந்த காரின் வலதுபக்கத்தில் லேசாக மோதியது. இதில் கவர்னருக்கோ, காரை ஓட்டிய டிரைவருக்கோ காயம் எதுவும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினார்கள்.
இந்த சம்பவம் குறித்து கவர்னரின் கார் டிரைவர் திருச்சியை சேர்ந்த வைத்தியலிங்கம், புதுக்கோட்டை வெள்ளனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்த விஜயசுந்தரம் (வயது 47) என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
பின்னர் அவரை போலீசார் புதுக்கோட்டை மாவட்ட கோர்ட்டு நீதிபதி நாகராஜன் வீட்டிற்கு அழைத்துச்சென்று, அவர் முன்பு ஆஜர்படுத்தினர். பஸ் டிரைவர் விஜயசுந்தரத்தை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து விஜயசுந்தரம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story