ரெட்டணையில் புதிய துணை மின் நிலையம், அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்


ரெட்டணையில் புதிய துணை மின் நிலையம், அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 22 July 2018 3:45 AM IST (Updated: 22 July 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே ரெட்டணையில் ரூ.2 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்ட துணை மின் நிலையத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.

மயிலம்,

திண்டிவனம் அருகே மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டணை, அவ்வையார்குப்பம், வெங்கந்தூர், ஆலகிராமம், முப்புளி, மண்டகப்பட்டு மற்றும் இதை சுற்றியுள்ள கிராமங்கள் பயன்பெறும் வகையில், விழுப்புரம் மின்பகிர்மான வட்டம் சார்பில், தீன்தயாள் உபாத்யாய கிராம ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் ரெட்டணையில் ரூ.2 கோடியே 46 லட்டசத்து 9 ஆயிரம் செலவில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மயிலம் தொகுதி டாக்டர் மாசிலாமணி எம்.எல்.ஏ., சப்–கலெக்டர்(பயிற்சி) சரவணன், திண்டிவனம் தாசில்தார் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு புதிய துணை மின்நிலைய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து சோதனை ஓட்டத்தினை தொடங்கி வைத்து, கட்டிட வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

இதில் மயிலம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சேகரன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் புலியனூர் விஜயன், மின் சாரப்பிரிவு அண்ணா தொழிற்சங்கத்தின் விழுப்புரம் மண்டல செயலாளர் கொடியம் பன்னீர்செல்வம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, ஒன்றிய மாணவரணி இணை செயலாளர் செந்தில்குமார், வீடூர் மனோகரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள், அலுவலர்கள், கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story