சவேரியார்பட்டியில் பஸ் நிறுத்தக்கோரி மாணவர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


சவேரியார்பட்டியில் பஸ் நிறுத்தக்கோரி மாணவர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 July 2018 4:15 AM IST (Updated: 22 July 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

தா.பழூர் சவேரியார்பட்டியில் பஸ் நிறுத்தக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே சவேரியார்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மாணவ-மாணவிகள் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் பள்ளி களுக்கு செல்ல சவேரியார் பட்டி 4 ரோடு பஸ் நிறுத்தத்திற்கு வருவது வழக்கம். பின்னர் அங்கிருந்து பஸ் மூலம் பள்ளி களுக்கு சென்று வந்தனர். மேலும் ஜெயங்கொண்டத்தில் இருந்து சுத்தமல்லி நோக்கி செல்லும் அரசு பஸ், பின்னர் அங்கிருந்து அந்த பஸ் தா.பழூர் வழியாக ஜெயங்கொண்டம் நோக்கி செல்லும். இந்நிலையில் கடந்த 1 வாரமாக இந்த வழியாக செல்லும் பஸ் தா.பழூர் சவேரியார் பட்டி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. மாணவர்கள் கை காண்பித்து நிறுத்தியும் பஸ் நிற்கவில்லை. இதனால் மாணவர்கள் தினமும் பள்ளிகளுக்கு செல்வதற்கு அவதியடைந்து வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று அரியலூர்-தா.பழூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் தா.பழூர் சவேரியார்பட்டி பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல அதிகாரிகளிடம் கூறி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்-தா.பழூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story