கொடைக்கானல் பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள்
கொடைக்கானல் வனப்பகுதியில் யானைகள் உள்ளன. இவை, அடிவாரப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
கொடைக்கானல்,
இந்தநிலையில் நேற்று பகலில் புலியூர் பகுதியில் 8 யானைகள் முகாமிட்டிருந்தன. இவை அதே பகுதியை சேர்ந்த ராமர்பாண்டி என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்தன. பின்னர் அங்கு பயிரிட்டிருந்த அவரை, பீன்ஸ், வாழை பயிர்களை சேதப்படுத்தின. மேலும் தோட்டத்தில் இருந்த பலா மரங்களை வேரோடு பிடுங்கி சாய்த்தன. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர், விவசாயிகளுடன் இணைந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சேதம் அடைந்த பயிர்களின் மதிப்பு ரூ.3 லட்சம் வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக கொடைக் கானல் தாலுகா புலியூர், அஞ்சுவீடு, கணேசபுரம் போன்ற பகுதிகளில் யானைகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. பயிர்களை சேதப்படுத்துவதுடன் விவசாயிகளையும் காட்டு யானைகள் தாக்கி வருகின்றன. இதனால் தோட்டங் களுக்கு வேலைக்கு செல்ல விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று பகலில் புலியூர் பகுதியில் 8 யானைகள் முகாமிட்டிருந்தன. இவை அதே பகுதியை சேர்ந்த ராமர்பாண்டி என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்தன. பின்னர் அங்கு பயிரிட்டிருந்த அவரை, பீன்ஸ், வாழை பயிர்களை சேதப்படுத்தின. மேலும் தோட்டத்தில் இருந்த பலா மரங்களை வேரோடு பிடுங்கி சாய்த்தன. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர், விவசாயிகளுடன் இணைந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சேதம் அடைந்த பயிர்களின் மதிப்பு ரூ.3 லட்சம் வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story