சென்னிமலை அருகே மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் சாவு


சென்னிமலை அருகே மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 22 July 2018 3:30 AM IST (Updated: 22 July 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் இறந்தன.

சென்னிமலை,

சென்னிமலை அருகே உள்ள முருங்கத்தொழுவு கிராமத்தில் உள்ள பனங்காட்டு தோட்டத்தில் வசிப்பவர் ரங்கசாமி. (வயது 80) விவசாயி. இவர் 24 ஆடுகள் வளர்த்து வருகிறார். தினமும் இரவு வீடு அருகே உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விடுவார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டுக்கு படுக்க சென்று விட்டார்.

பின்னர் நேற்று காலை 6 மணிக்கு வந்து ஆட்டு பட்டியை பார்த்த போது ரங்கசாமி திடுக்கிட்டார். அங்கு 6 ஆடுகள் ஏதோ ஒரு மர்ம விலங்கு கடித்து குதறி செத்துக்கிடந்தது.

மேலும் 5 ஆடுகள் கடித்து குதறப்பட்டு உயிருக்கு போராடி கொண்டு இருந்தன. இது தவிர சில ஆடுகளுக்கு கால் முறிந்திருந்தது. செத்துக்கிடந்த ஆடுகளை பார்த்து ரங்கசாமி கதறி அழுதார். தகவலறிந்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

அதன்பின்னர் கால்நடை மருத்துவரை வரவழைத்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆட்டுப்பட்டி உள்ள இடத்தை சுற்றி குடியிருப்பு பகுதி உள்ளதால் மற்ற மர்ம விலங்குகள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. அதனால் நாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறி இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறினார்கள்.

இறந்த ஆடுகளின் மதிப்பு பல ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. உரிய நிவாரணம் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என விவசாயி ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.


Related Tags :
Next Story