வீட்டில் இருந்தபடியே போலி ரெயில் டிக்கெட் தயாரித்து விற்ற வாலிபர் கைது
வீட்டில் இருந்தபடியே போலியான ரெயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்த வாலிபரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்,
காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செல்வராஜ், குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் (சென்னை) அழகர்சாமி, திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் தலைமையிலான பாதுகாப்பு படையினர் காட்பாடி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் தனியார் டிக்கெட் புக்கிங் ஏஜெண்டுகளை கடந்த சில நாட்களாக ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது, வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் போலியான ரெயில் முன்பதிவு டிக்கெட், ஏ.சி. படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் தயாரித்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை செய்தனர். அங்கு ஐ.ஆர்.சி.டி.சி. சாப்ட்வேரை போலியாக உருவாக்கி, அதன் மூலம் போலி ரெயில் டிக்கெட் தயாரிப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அதேபகுதியை சேர்ந்த அரவிந்த் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 25 போலியான ரெயில் முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் கணினி, பிரிண்டர்கள், பேப்பர் ரோல் ஆகியவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story