உருக்காலைக்கு கையகப்படுத்தி பயன்படுத்தப்படாத நிலத்தை மீண்டும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்
சேலம் உருக்காலைக்கு கையகப்படுத்தி பயன்படுத்தப்படாத நிலத்தை மீண்டும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று சேலத்தில் பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
சேலம்,
சேலம் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூருக்கு வந்து டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்துள்ளார். இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் டெல்டா மாவட்டங்களில் கடைக்கோடியில் உள்ள விவசாயிக்கும் தண்ணீர் கிடைப்பதற்கு வழிவகை செய்யவேண்டும். அதற்கு காவிரி நீர் செல்லும் பாசன கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அணை நிரம்பும் காலத்தில் உபரிநீரை சேலம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இந்த திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டூர் அணையில் இருந்து பாயும் காவிரி ஆற்றில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு இடத்தில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். சம்பா நடவு பணிகளை விவசாயிகள் தொடங்க இருப்பதால் விதை நெல், உரம், பூச்சி மருந்து ஆகியவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் உருக்காலைக்கு 4 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது ஏக்கருக்கு இழப்பீடு ரூ.1,240 வழங்கினார்கள். நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பலருக்கு இழப்பீடு தொகையோ? வேலைவாய்ப்புகளோ? வழங்கப்படவில்லை. கையகப்படுத்தப்பட்ட நிலம் உரிய பயன்பாட்டிற்கு எடுத்து கொள்ளப்படாமல் அப்படியே கிடப்பில் கிடக்கிறது.
பொதுவாக நிலம் எடுப்பு சட்டத்தின்படி ஏதாவது ஒரு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு 36 ஆண்டுகளாக அந்த நிலத்தை பயன்படுத்தவில்லை என்றால் அதை சம்பந்தப்பட்டவர்களுக்கே திருப்பி கொடுக்க வேண்டும். அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் கோர்ட்டு உத்தரவுப்படி 36 ஆண்டுகள் பயன்படுத்தப்படாத நிலம் சம்பந்தப்பட்ட நபர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் உருக்காலையில் பயன்படுத்தப்படாத நிலத்தை மீண்டும் அதே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அரசு காலதாமதம் செய்து வருகிறது. இதனால் மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சரியான நேரத்தில் செய்து கொடுக்க முடியவில்லை. இதன்மூலம் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு சார்பில் தமிழகத்திற்கு வர வேண்டிய சுமார் ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.
இதைத்தொடர்ந்து நடந்த கட்சி நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தில் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் அருள், மாவட்ட செயலாளர்கள் கதிர்.ராசரத்தினம், சாம்ராஜ், மாவட்ட தலைவர் ஆறுமுகம், துணைச்செயலாளர் அண்ணாலை, மகளிர் அணி நிர்வாகிகள் கலா, மாதவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story