இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் மீண்டும் போராட்டம் சோலாப்பூரில் அரசு பஸ் தீ வைத்து எரிப்பு
இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோலாப்பூரில் அரசு பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது.
மும்பை,
இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோலாப்பூரில் அரசு பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது.
போராட்டம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர். அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையை அடுத்து அவர்கள் போராட்டத்தை நிறுத்தி வைத்திருந்தனர். இந்தநிலையில் மராத்தா சமூகத்தினர் நேற்று மீண்டும் இடஒதுக்கீடு கேட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோலாப்பூரில் சம்பாஜி சவுக்கில் நடந்த போராட்டத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பஸ்சுக்கு தீ வைப்பு
இதேபோல சோலாப்பூர் வடக்கு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை வழிமறித்து நிறுத்தி தீ வைத்து எரித்தனர். மராத்தா சமூகத்தினரின் இந்த போராட்டம் லாத்தூர், பீட் போன்ற இடங்களிலும் நடந்தது. அங்கு நடந்த போராட்டத்தில் பஸ் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு சில இடங்களில் போராட்டக்காரர்கள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் உருவப்படத்தை தீ வைத்து எரித்தனர்.
பீட் மாவட்டத்தில் மராத்தா சமூகத்தினர் மொட்டை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story