புனேயில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 8 பேர் படுகாயம்


புனேயில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 8 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 22 July 2018 5:45 AM IST (Updated: 22 July 2018 3:48 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

புனே, 

புனேயில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

இடிந்து விழுந்த கட்டிடம்

புனே, முன்ட்வா கேசவ் பகுதியில் உள்ள 2 மாடி கட்டிடத்தில் சுபாஷ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். 30 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடம் ஆபத்தான நிலையில் இருந்துள்ளது. எனவே மாநகராட்சி கட்டிடத்தை காலி செய்யுமாறு சுபாசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எனினும் விபரீதத்தை அறியாத அவர் கட்டிடத்தை காலி செய்யாமல் இருந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் திடீரென அந்த கட்டிடம் சீட்டுக்கட்டு சரிவது போல இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த சுபாஷ் மற்றும் அவரது மனைவி, பிள்ளைகள் இடிபாடுகளில் சிக்கினர்.

8 பேர் மீட்பு

தகவல் அறிந்து தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த 8 பேரை மீட்டனர். படுகாயமடைந்த அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இடிபாடுகளில் பசுமாடு ஒன்று சிக்கிக்கொண்டது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story