பிரதமர் மோடியை கட்டி தழுவியதன் மூலம் ராகுல் காந்தி ஒரு நல்ல தகவலை பரப்பி இருக்கிறார் சரத்பவார் சொல்கிறார்
பிரதமர் மோடியை கட்டி தழுவியதன் மூலம் ராகுல்காந்தி நல்ல தகவலை பரப்பி இருக்கிறார் என்று சரத்பவார் கூறினார்.
மும்பை,
பிரதமர் மோடியை கட்டி தழுவியதன் மூலம் ராகுல்காந்தி நல்ல தகவலை பரப்பி இருக்கிறார் என்று சரத்பவார் கூறினார்.
கட்டி தழுவிய ராகுல்காந்தி
நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய ராகுல்காந்தி, மோடி தலைமையிலான அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். பின்னர் பேச்சை முடித்ததும். பிரதமர் மோடியின் இருக்கைக்கு சென்று அவரை கட்டி அணைந்தார்.
இதுகுறித்து மும்பையில் நடந்த கட்சி கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பேசியதாவது:-
நல்ல தகவல்
நாடாளுமன்றத்தில் ஒரு இளைஞன், வயதானவரை கட்டி தழுவினார். இதில் இருந்து ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் அனைவருக்கும் நல்ல செய்தி ஒன்று பரப்பப்பட்டு உள்ளது.
அந்த நல்ல செய்தி என்னவென்றால் அரசியல் மாறுபாடுகள் எங்களுக்குள் இருந்தபோதும், நாட்டின் வளர்ச்சியில் அனைவரும் ஒன்றாக பாடுபடுவோம் என்பதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சகன் புஜ்பால் விவகாரம்
மேலும் சகன் புஜ்பால் கைது குறித்து அவர் பேசுகையில், “சகன் புஜ்பால் ஏன் இவ்வாறு நடத்தப்பட்டார். அவர்கள்(அரசு) புஜ்பாலை மக்களிடம் இருந்து விலக்கி வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அது நடக்கவில்லை. நாங்கள் இதுபோன்ற அரசியல் பழி தீர்க்கும் நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை.
நாம் மோடிக்கு மாற்று யார் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறோம். மாற்றுகள் ஒருநாள் இரவில் உருவாவதில்லை. ஒரே மனநிலை கொண்ட கட்சிகள் அனைவரும ஒன்றாக இந்த தேர்தலை சந்திக்கவேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story