பெண்கள் தயாரிக்கும் தேசியக்கொடி
நமது தேசியக் கொடியை தயாரிக்கும் பணியில் கர்நாடக மாநில கிராமத்து பெண்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களது கைவண்ணத்தில் தயாராகும் தேசியக் கொடிகள் தான் அரசு ரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள முக்கியமான அரசு அலுவலகங்களின் கட்டிடங்கள், உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்கள், அதிகாரிகளின் கார்கள் ஆகியவற்றை இவர்கள் உருவாக்கிய தேசியக்கொடிகள்தான் அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன.
400-க்கும் மேற்பட்டவர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டில் 60 ஆயிரம் தேசிய கொடிகளை தயாரித்திருக்கிறார்கள். இந்த கிராமம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அதன் பெயர், துளசிகிரி. இங்கு தேசியக்கொடி தயாரிக்கும் பணி இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது.
‘‘சிறிய பிழை இருந்தால் கூட கொடி நிராகரிக்கப்பட்டுவிடும்’’ என்கிறார், மேற்பார் வையாளராக பணியாற்றும் அன்னப்பூர்ணா கோட்டி. மேலும் “நாங்கள் தயாரிக்கும் தேசியக்கொடி உலகெங்கிலும் பயன்பாட்டில் இருக்கிறது. அதற்கு சல்யூட் அடித்து வணங்குவதை பார்ப்பதற்கு பெருமையாக இருக்கிறது’’ என்கிறார்.

முதலில் இங்கு தேசியக்கொடிக்கான மூலப்பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. அங்கிருந்து 2 மணி நேர பயண தூரத்தில் உள்ள பென்கேரி கிராமத்தில் தேசியக் கொடியை முழுமைப்படுத்தும் பணி நடக்கிறது.
இதற்காக துளசிகிரி கிராமத்தில் ‘கர்நாடகா காட்டன் வில்லேஜ் எண்டர்பிரைசஸ்’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தேசியக்கொடிக்கான குறியீட்டின் வழிகாட்டு நெறிமுறைகள் துல்லியமான அளவீடுகளில் கண்காணிக்கப் படுகின்றன. அதற்கேற்ப பெண்கள் பணியாற்று கிறார்கள். அதேபோல் தையல் பணியையும் நேர்த்தியாக மேற்கொள்கிறார்கள்.
‘‘சிறிய பிழை இருந்தால் கூட கொடி நிராகரிக்கப்பட்டுவிடும்’’ என்கிறார், மேற்பார் வையாளராக பணியாற்றும் அன்னப்பூர்ணா கோட்டி. மேலும் “நாங்கள் தயாரிக்கும் தேசியக்கொடி உலகெங்கிலும் பயன்பாட்டில் இருக்கிறது. அதற்கு சல்யூட் அடித்து வணங்குவதை பார்ப்பதற்கு பெருமையாக இருக்கிறது’’ என்கிறார்.
Related Tags :
Next Story