சிவமொக்கா டவுனில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் போலீஸ் பாதுகாப்புடன், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
சிவமொக்கா டவுனில், நடைபாதையை ஆக்கிரமித்து போடப்பட்டு இருந்த 20-க்கும் மேற்பட்ட கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
சிவமொக்கா,
சிவமொக்கா டவுனில், நடைபாதையை ஆக்கிரமித்து போடப்பட்டு இருந்த 20-க்கும் மேற்பட்ட கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
காந்தி பஜார் பகுதி
சிவமொக்கா டவுனில் உள்ள காந்தி பஜார் பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். இதனால் அப்பகுதி எப்போதும் பரபரப்பு நிறைந்தே காணப்படும். இந்த நிலையில் காந்தி பஜாரில் நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் கடைகள் போட்டு இருந்தனர். இதனால் பாதசாரிகளுக்கு நடக்க கஷ்டமாக இருந்தது.
பாதசாரிகள் நடை பாதையை விட்டு சாலைகளில் இறங்கி நடந்து செல்வதால் சில சமயங்களில் விபத்தும் ஏற்பட்டு வந்தது. இதனால் நடைபாதையை ஆக்கிரமித்து போடப்பட்டு இருந்த கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.
கடைகள் அகற்றம்
அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை வைத்திருந்தவர்களுக்கு, கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி நோட்டீசு வழங்கியது. ஆனாலும் கடைக் காரர்கள் கடையை அகற்றவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை காந்தி பஜார் பகுதிக்கு போலீசாருடன் சென்ற மாநகராட்சி அதிகாரிகள், நடைபாதையை ஆக்கிரமித்து போடப்பட்டு இருந்த 20-க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றினர். இது போலீசாரின் பாதுகாப்புடன் நடந்தது. கடைகளை அகற்றியதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதனால் காந்தி பஜார் பகுதியில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story