மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை கைவிட வேண்டும் வெள்ளையன் பேட்டி


மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை கைவிட வேண்டும் வெள்ளையன் பேட்டி
x
தினத்தந்தி 23 July 2018 4:15 AM IST (Updated: 23 July 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவை மாநில தலைவர் வெள்ளையன் தெரிவித்தார்.

சீர்காழி,

சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய சங்கம் சார்பில் மாநில அளவிலான நெல் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த விழா 2 நாட்கள் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நம்முடைய பாரம்பரிய விவசாயம் காப்பாற்றப்படவேண்டும் என்று நம்மாழ்வார் தொடங்கி வைத்த கருத்து எல்லா இடத்திலும் பரவி வருகிறது. மக்களிடையே சிறுதானியங்களை உணவுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி வெளிநாட்டில் இருந்து விதைகளை இறக்குமதி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். வெளிநாட்டு விதைகள் மரபணு மாற்றம் செய்யப் பட்டவை. விளைச்சல் அதிகமாக இருக்கலாம். ஆனால் அந்த விதையையே நாம் நம்பியிருந்தால் சில நாட்களுக்கு பிறகு விதைப்பதற்கு நம்மிடம் விதை இருக்காது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை கைவிட வேண்டும். விவசாயிகள் முழுவதுமாக இயற்கை விவசாயத்திற்கு மாறவேண்டும். அதற்கு முதலாவதாக வெளிநாட்டு குளிர்பானங்களை தூக்கி எறிய வேண்டும். நம்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story