தி.மு.க. தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் மீது கடும் நடவடிக்கை, மேலிட பிரதிநிதிகள் எச்சரிக்கை
தி.மு.க. தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் மீது கடும் நடவடிக்கை என கட்சியின் மேலிட பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கமுதி,
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.கழக வாக்கு சாவடி முகவர்கள் குழு அமைத்தல் பொருட்டு ஆய்வுக்கூட்டம் கமுதியில் மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திசைவீரன், முருகவேல், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் போஸ், மாநில வர்த்தக அணி செயலாளர் ராமர், மாவட்ட துணை செயலாளர் கருப்பையா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பாராகு, முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதிமணி, பரமக்குடி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் ஜீவானந்தம், நயினார்கோயில் ஒன்றிய பொறுப்பாளர் சக்தி, திருவாடானை ஒன்றிய செயலாளர் ரவி, ராமேசுவரம் நகர் பொறுப்பாளர் நாசர்கான், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பாண்டி, நெசவாளர் அணி அமைப்பாளர் மனோகரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் நாகரத்தினம், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் நல்லசேதுபதி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கருணாநிதி எம்.எல்.ஏ. மற்றும் செங்கம் எம்.எல்.ஏ. கிரி ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.
அப்போது அவர்கள், வருகிற சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும். கழக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினால் நியமனம் செய்யப்பட்ட புதிய மாவட்ட கழக பொறுப்பாளருக்கு அனைத்து நிர்வாகிகளும் ஒத்துழைப்புதர வேண்டும்.
தலைமைக்கு கட்டுப்படாத, சரிவர செயல்படாத நிர்வாகிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுரை வழங்கினர். அபிராமம் பேரூர் கழக செயலாளர் ஜாகிர் உசைன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் போகலூர் சஞ்சய் காந்தி, பசும்பொன் தனிக்கொடி, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் ஆசிக் அமீர், கமுதி தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் காந்தி, துணை செயலாளர் கிழவராஜன், கமுதி வடக்கு ஒன்றிய துணை செயலாளர் நேதாஜி சரவணன், முன்னாள் கமுதி ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சண்முகநாதன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் பொன் ஆதி உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.