பெரம்பலூரில், மாவட்டங்களுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கு 30 வீரர்கள் தேர்வு


பெரம்பலூரில், மாவட்டங்களுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கு 30 வீரர்கள் தேர்வு
x
தினத்தந்தி 23 July 2018 4:15 AM IST (Updated: 23 July 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில், மாவட்டங்களுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கு 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் வருகிற ஆகஸ்டு மாதம் 1, 2, 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் நடத்தும் 17 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் மாவட்டங் களுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் போட்டி தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்ட அணிக்காக விளையாடும் விளையாட்டு வீரர்கள் தேர்வு பெரம்பலூர்-துறையூர் ரோட்டில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 17 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். இதற்காக நேற்று காலை முதலே மாணவர்கள் மைதானத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்களை பவுலிங், பேட்டிங், கீப்பிங், பில்டிங் ஆகியவற்றை பெரம்பலூர் மாவட்ட பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தினர் செய்ய வைத்தனர்.

பள்ளி மாணவர்கள் தங்களது திறமையை ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர். இதில் சிறந்து விளையாடிய 30 வீரர்களை தேர்வு செய்தனர். பெரம்பலூரில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 2 அணிகளுக்காக 30 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அவர்கள் பெரம்பலூர் மாவட்ட சார்பில் உள்ள அணிகளுக்கு விளையாடவுள்ளதாகவும் கிரிக்கெட் சங்கத்தினர் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் விஜயன், செயலாளர் பழனிசாமி, பொருளாளர் கருணாகரன் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர். 

Next Story