வங்கியில் செலுத்த சென்ற ரூ.17 லட்சத்துடன் ஓடிய திபேத் அகதி பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் போலீசில் புகார்
வங்கியில் செலுத்த சென்ற ரூ.17 லட்சத்துடன் திபேத் அகதி தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
மைசூரு,
வங்கியில் செலுத்த சென்ற ரூ.17 லட்சத்துடன் திபேத் அகதி தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
ரூ.17 லட்சத்துடன் மாயம்மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா பைலுகுப்பே பகுதியில் துப்தேன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் திபேத் அகதியான டென்ஜின் சோசன்சா ஸ்டிரோ என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் துப்தேன், பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வசூலான பணம் ரூ.17 லட்சத்தை வங்கியில் கொண்டு செலுத்திவிட்டு வருமாறு திபேத் அகதியிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது, வங்கிக்கு சென்ற டென்ஜின், திரும்பி வரவில்லை. மேலும் வங்கி கணக்கிலும் பணம் போடவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த துப்தேன், அவரை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
போலீசில் புகார்அப்போது தான், டென்ஜின் ரூ.17 லட்சத்துடன் ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து பிரியப்பட்டணா போலீசில் துப்தேன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டென்ஜினை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.