ரோப்கார் பராமரிப்பு பணி: மின் இழுவை ரெயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்


ரோப்கார் பராமரிப்பு பணி: மின் இழுவை ரெயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 23 July 2018 5:00 AM IST (Updated: 23 July 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

பழனி மலைக்கோவிலில் ரோப்கார் பராமரிப்பு பணி நடைபெற்று வந்ததால் மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பழனி, 

முருகப்பெருமானின் 3-ம் படை வீடாக பழனி விளங்குகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் பழனியில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதேபோல் ஆண்டு முழுவதும் முருகன் கோவிலில் திருவிழாக்கள் நடைபெறும்.

இதனால் பழனிக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகை இருக்கும். மேலும் விடுமுறை தினங்களிலும் மலைக்கோவிலில் வழக்கத்தைவிட 2 மடங்கு பக்தர்கள் கூட்டம் காணப்படும். அதன்படி விடுமுறை தினமான நேற்றும் மலைக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். இதனால் படிப்பாதை, யானைப்பாதையில் பக்தர்கள் கூட்டமாக இருந்தது. ரோப்காரில் வருடாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் மின் இழுவை ரெயில் நிலையத்தில் நேற்று பக்தர்கள்குவிந்தனர். இதனால் நீண்ட வரிசை காணப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல முடிந்தது. அதே போல் மலைக்கோவில் வெளிப்பிரகாரம், பொது, சிறப்பு மற்றும் கட்டண தரிசன வழிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பழனியில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்த போதும் அதனையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

Next Story