திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் பலி


திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் பலி
x
தினத்தந்தி 23 July 2018 5:30 AM IST (Updated: 23 July 2018 5:23 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் ஏபி நகரை சேர்ந்தவர் பாலு (வயது 55). சின்னப்பள்ளபட்டியை சேர்ந்தவர் தங்கவேலு (42). பொன்மாந்துறை அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (30). இவர் கள் 3 பேரும் உறவினர்கள். இதில், தங்கவேலு திண்டுக்கல்லில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர்கள் நேற்று இரவு பொன்மாந்துறையில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நோக்கி வந்துகொண்டு இருந்தனர். அப்போது புதுப்பட்டி பிரிவில் இருந்து நான்கு வழிச்சாலையில் ஏற முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர் களை மீட்டனர். ஆனால் பாலு, தங்கவேலு ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்த சுரேசை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தங்கவேலு, பாலு ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story