நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 23 July 2018 5:44 AM IST (Updated: 23 July 2018 5:44 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திசையன்விளை-தென்காசி

திசையன்விளை நகர பஞ்சாயத்து மற்றும் சமாரியா தூய யோவான் மேல்நிலைப்பள்ளி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தை சுகாதார ஆய்வாளர் நவராஜ் தொடங்கி வைத்தார். பள்ளி ஆசிரியர் சுயம்புராஜன் வரவேற்றார். பள்ளி வளாகத்தில் ஊர்வலம் தொடங்கி காமராஜர் சாலை, காந்திஜி ரோடு வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தென்காசி அருகே உள்ள மேலகரம் நகரப்பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், நிர்வாக அதிகாரி லிங்கராஜ் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சரவணன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன், உடற்கல்வி ஆசிரியர் துரை, சுகாதார ஆய்வாளர் சுடலைமணி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஆலங்குளம்-செங்கோட்டை

ஆலங்குளம் நகர பஞ்சாயத்து சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் பெத்துராஜ் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் கங்காதரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீத்தாராமன், எழுத்தர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ்நிலையம் அருகில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில், ஆர்.ஏ. நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த கோஷங்களை எழுப்பினர். இதில் நகர பஞ்சாயத்து அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை அருகே உள்ள புதூர் நகர பஞ்சாயத்து சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் ஆதம், பூலாங்குடியிருப்பு அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் எம்.கே.பி.நர்சரி பிரைமரி பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story