நாகரசம்பட்டி அருகே நிலத்தகராறில் விவசாயி கொலை அண்ணன் - தம்பி கைது
நாகரசம்பட்டி அருகே நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்த அண்ணன் - தம்பியை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே உள்ளது செல்லப்பசாணம்பட்டி. இந்த ஊரை சர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 60). விவசாயி. இவருக்கும், இவரது சகோதரர் அப்பாத்துரைக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை சக்கரவர்த்தி தென்னந்தோப்பில் தேங்காய்களை ஆட்களை வைத்து உரித்து கொண்டிருந்தார்.
அந்த நேரம் அங்கு வந்த அவரது தம்பி அப்பாத்துரை, இவருடைய மகன்கள் ராஜசேகர் (35), சுரேஷ் (33) ஆகிய 3 பேரும் சக்கரவர்த்தியிடம் நிலம் தொடர்பாக தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது ஆத்திரமடைந்த ராஜசேகரும், சுரேசும், சக்கரவர்த்தியை தள்ளியதாக கூறப்படுகிறது. நிலைதடுமாறிய அவர் அருகில் இருந்த தேங்காய் உரிக்க பயன்படுத்தும் கடப்பாரையில் விழுந்தார். இதில் சக்கரவர்த்தியின் உடலில் கடப்பாரை இறங்கி பலத்த காயம் அடைந்தார்.
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சக்கரவர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
இது தொடர்பாக நாகரசம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கொலை வழக்குப்பதிவு செய்து, ராஜசேகர், சுரேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Related Tags :
Next Story