நெல்லை மாவட்டத்தில் 4-வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
நெல்லை மாவட்டத்தில் 4-வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். காப்பீட்டு உயர்வை குறைக்க வேண்டும். சுங்கவரி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடந்து வருகிறது.
நேற்று 4-வது நாளாக வேலை நிறுத்தம் நீடித்தது. நெல்லை மாவட்டத்தில் 5,200 லாரிகள் ஓடவில்லை. நெல்லை டவுன் நயினார் குளம் மார்க்கெட்டுக்கு தினந்தோறும் வெளியூரில் இருந்து 250-க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்லும். இந்த மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகள் ஏற்றி செல்லப்படும்.
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் குறைந்த அளவு லாரிகள் நயினார்குளம் மார்க்கெட்டுக்கு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகும் கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட உள்ளூர் காய்கறிகள் நயினார்குளம் மார்க்கெட்டுக்கு வருகின்றன.
கேரட், பீட்ரூட், சவ்சவ், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் வரத்து குறைந்து விட்டது. இதனால் காய்கறிகளின் விலை உயர்ந்து உள்ளது. நயினார்குளம் மார்க்கெட்டில் தினந்தோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை இழுந்துள்ளனர்.

Related Tags :
Next Story