குழந்தை கடத்த வந்ததாக கருதி பெண் அடித்துக்கொலை
மத்தியபிரதேச மாநிலத்தில் குழந்தை கடத்த வந்ததாக கருதி பெண் அடித்துக் கொல்லப்பட்டார்.
சிங்ரவுலி,
மத்தியபிரதேச மாநிலம் சிங்ரவுலி மாவட்டம் போஷ் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக வாட்ஸ் அப்பில் குழந்தை கடத்தும் கும்பல் நடமாடுவதாக வதந்திகள் பரவிவந்தது. இந்நிலையில் கடந்த 19-ந் தேதி அந்த பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடமாடியதை சிலர் பார்த்தனர். மனநிலை பாதிக்கப்பட்டவர் போல இருந்த அவர் குழந்தையை கடத்த வந்திருக்கலாம் என சிலர் சந்தேகப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து ஒரு கும்பல் அந்த பெண்ணை கட்டை மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. இதில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடலை காட்டுப்பகுதியில் உள்ள சாக்கடையில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர். மறுநாள் பெண் பிணம் கிடந்ததை பார்த்த சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி 12 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story