கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு இளைஞர்கள் மனு
கரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோரி மாவட்ட கலெக்டரிடம் இளைஞர்கள் மனு கொடுத்தனர்.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 312 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் கூட்டத்தின்போது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.16,350 மதிப்பிலான செயற்கை காலினை கலெக்டர் வழங்கினார்.
கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், கரூர் மாவட்ட ஊராட்சி பகுதிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு மற்றும் அரியர்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கரூர் நகராட்சி 39-வது வார்டுக்கு உட்பட்ட தாந்தோன்றி தில்லை நகரை சேர்ந்த இளைஞர்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் தண்ணீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஏற்கனவே அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அடிக்கடி தண்ணீர் விரயமாகிறது. கழிவுநீர் செல்ல வடிகால் வசதி இல்லை. இதனால் சாலையில் தேங்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கடவூர் தாலுகா தேவர்மலை கிராமம் குடிவண்டை ஊர் பொதுமக்கள் அளித்த மனுவில், ஊர் பொதுமக்கள் நடந்து செல்வதற்கான நடைபாதையை சிலர் கம்பிவேலி போட்டு ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மக்கள் சில கிலோ மீட்டர் சுற்றி செல்வதால் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே அந்த ஆக்கிரமிப்பை அகற்றி நடைபாதையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் வருகிற 30-ந் தேதி ஊர் பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருந்தனர்.
கரூர் வெங்கமேடு கொங்குநகரை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி ரக்ஷனா தனது குடும்பத்துடன் வந்து பொதுநல மனு ஒன்றை கொடுத்தார். அதில், கரூர் அருகே செல்லாண்டிபாளையம் அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கிய ஹரி என்கிற சபரீசின்(வயது 17) உடலை மீட்க கிட்டத்தட்ட 20 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. வெறும் டியூப், பாதாள கரண்டி உள்ளிட்டவற்றை வைத்து தான் தீயணைப்பு படைவீரர்கள் தேடினர். இதனால் தான் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. கரூரில் அமராவதி, காவிரி, நொய்யல் உள்ளிட்ட ஆறுகள் ஓடுவதால் வெள்ள காலங்களிலும், அசம்பாவித சம்பவங்களின் போதும் மீட்பு பணியை துரிதமாக மேற்கொள்ளும் வகையில் தீயணைப்பு துறைக்கு சிறிய அளவிலான மின்மோட்டார் படகினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
கிருஷ்ணராயபுரம் வட்டம் லாலாபேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜ் அளித்த மனுவில், கள்ளப்பள்ளி ஊராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பினால் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை முழுமையாக செய்ய முடியாமல் உள்ளது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி 5 ஆண்டுகள் ஆகியும் அது பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் மக்கள் குடிநீர் பிரச்சினையால் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
குளித்தலை முன்னாள் எம்.எல்.ஏ. வெள்ளியணை ராமநாதன் உள்பட சிலர் அளித்த மனுவில், வெள்ளியணை கடைவீதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிறது. தற்போது இது சேதமடைந்து எப்போது வேண்டுமானலும் இடிந்து விழலாம் என்கிற சூழலில் உள்ளது. இதற்கு மாற்றாக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டாலும் கூட சேதமடைந்த தொட்டியை அகற்றாமல் இருக்கிறார்கள். எனவே அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன்னர் அதனை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கரூர் சுக்காலியூர் பைபாஸ் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையில் மது குடிப்போரால் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்து சம்பவங்களும் நிகழ்கின்றன. எனவே அந்த கடையை அங்கிருந்து மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் தெரிவித்து இருந்தனர். மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாற்றுத் திறனாளியான குளித்தலை அருகே உள்ள சீகம்பட்டியை சேர்ந்த கலியபெருமாள் மனு கொடுத்தார்.மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் என்.எஸ்.பாலசுப்பிரமணியம், ஆதிதிராவிட நல அலுவலர் ஜெ.பாலசுப்ரமணியன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி ஜான்சி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story