மதுரைக்கான திட்டங்களை அ.தி.மு.க. அரசு அதிக அளவு வழங்கி உள்ளது - ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.


மதுரைக்கான திட்டங்களை அ.தி.மு.க. அரசு அதிக அளவு வழங்கி உள்ளது - ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 24 July 2018 4:30 AM IST (Updated: 24 July 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

மதுரைக்கான திட்டங்களை அ.தி.மு.க. அரசு அதிக அளவு வழங்கி இருக்கிறது என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

மதுரை,

மதுரை அ.தி.மு.க. புறநகர் மாவட்டம், கிழக்கு ஒன்றியம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் தக்கார் பாண்டி தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், வண்டியூர் பகுதி செயலாளர் முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கள்ளந்திரி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

அ.தி.மு.க. ஆட்சியை எப்படியாவது கவிழ்த்திட வேண்டும் என்று எதிர்கட்சிகள் பல்வேறு சூழ்ச்சிகளை செய்தனர். அதையெல்லாம் தவிடுபொடியாக்கி இழந்த சின்னத்தையும், கொடியையும், மீட்டது மட்டுமல்லாது கட்சியை மிகப்பொலிவுடன் முதல்–அமைச்சரும், துணை– முதல் அமைச்சரும் உருவாக்கி உள்ளனர். நாட்டிலேயே நிர்வாகத்திறமையில் தமிழகம் 2–வது இடத்தில் உள்ளது என்ற வரலாற்று சிறப்பை உருவாக்கி உள்ளனர். விரைவில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு செல்வார்கள். இப்படிப்பட்ட சாதனைகளை மக்களிடத்தில் கட்சியினர் எடுத்துச்சொல்ல வேண்டும்.

முன்பெல்லாம் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு தான் பூத் கமிட்டி அமைத்தோம். ஆனால் தற்போது விரைவாக அமைக்க சொல்லி இருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் இலக்காக வகுத்து நாம் செயல்பட வேண்டும் குறிப்பாக மதுரையை எடுத்துக்கொண்டால் திட்டங்களை அ.தி.மு.க. அரசு அதிக அளவில் வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாது தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினையில் வெற்றி கண்டு இன்றைக்கு தமிழகத்தின் அனைத்து அணைகளும் நீர் நிரம்பி வருவது வளமான தமிழகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story