வரத்துவாரிகளை முழுமையாக தூர்வாராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் பொதுமக்கள் எச்சரிக்கை
அறந்தாங்கி அருகே வரத்துவாரிகளை முழுமையாக தூர்வாராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆவுடையார்கோவில்,
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள கூகனூர் ஏரி, நாட்டாவட்டி ஏரி போன்ற ஏரிகளுக்கும் சிறு சிறு குளங்களுக்கும் கல்லணை கால்வாய் வாய்க்காலில் இருந்து காவிரி தண்ணீர் செல்லும் வரத்து வாரி உள்ளது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த வாரியில் செல்லும் தண்ணீர் ஏரிகளில் சேகரமாகி சுமார் 350 ஏக்கர் வயல்களுக்கு பாசன வசதி அளிக்கின்றன. இந்த வரத்துவாரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்ததால், மெயின் வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டபோதிலும், ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது தாமதமானது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும், கூகனூர் ஏரிக்கு செல்லும் வரத்து வாரியை தூர்வாரி புனரமைக்க வேண்டும் என அரசுக்கும், பொதுப்பணித்துறையினருக்கும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூகனூர் ஏரிக்கு செல்லும் வரத்து வாரியை தூர்வார பொதுப்பணித்துறை, ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த அறிவிப்பையடுத்து, பொதுப்பணித்துறை அதி காரிகள், தூர்வாருவதற்கு பொக்லைன் எந்திரத்தை அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து சுப்பிரமணியபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பெருமாள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-
நாங்கள் அதிகாரிகளிடம் வரத்து வாரி நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே ஒதுக்கப்பட்ட நிதியில் முறையாக பணிகளை மேற்கொள்ள கோரிக்கை விடுத்தோம். அவர்களும் பணிகளை நல்ல முறையில் செய்து தருவதாக கூறினர். ஆனால் ஒதுக்கப்பட்ட ரூ. 4 லட்சம் நிதியில் 2 நாட்கள் மட்டுமே எந்திரம் மூலம் பணிகளை மேற்கொண்டனர். பாதி பணிகளை கூட செய்யவில்லை. இதுகுறித்து நாங்கள் அதிகாரிகளை கேட்டதற்கு தூர்வாரும் பணிகள் முடிந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து நாங்கள் போராட்டத்தை அறிவித்த பிறகு அவசர அவசரமாக தூர்வாருவதற்காக மேலும் எந்திரங்களை அனுப்பி உள்ளனர். இதில் இருந்தே தூர்வாரும் பணியில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது. எனவே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து முழுமையாக வரத்துவாரிகளை தூர்வாராவிட்டால் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏரி, குளங்களில் தண்ணீர் போதிய கொள்ளளவு நிரம்புவதில்லை. எனவே தமிழக அரசு ஏரி, குளங்களை மராமத்து செய்யும்போது, பிரதிநிதிகளாக விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டு, தூர் வாரும் பணிகள் முறையாக நடக்கின்றனவா என கண்காணிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Related Tags :
Next Story