காதல் திருமணம் செய்த ஆசிரியைக்கு கொலை மிரட்டல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு
கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் காதல் திருமணம் செய்த ஆசிரியை புகார் மனு கொடுத்தார்.
ஈரோடு,
நான் எம்.எஸ்சி., பி.எட். படித்துவிட்டு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் முத்தூர் பெருமாள்கோவில்புதூரை சேர்ந்த கவின்குமாரும், நானும் கல்லூரியில் படித்தபோது காதலித்து வந்தோம். கவின்குமார் என்னிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பழகினார். அதை நம்பி 7 ஆண்டு காதலித்து நாங்கள் கடந்த 10–4–2017 அன்று பெருந்துறையில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.
நாங்கள், இருவீட்டாருக்கும் தெரியாமல் தனித்தனியாக வசித்து வந்தோம். இருவரும் பலமுறை ஊட்டி, ஏற்காடு, கொல்லிமலை, மேட்டூர் ஆகிய ஊர்களுக்கு சென்று தங்கி உள்ளோம். இதனால் நான் 3 முறை கர்ப்பமடைந்து உள்ளேன். கவின்குமார் வற்புறுத்தலின்பேரில் எனது கர்ப்பத்தை கலைத்துவிட்டேன்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எனது கணவர் கவின்குமாரின் குடும்பத்தினருக்கு எங்களது காதல் திருமணம் பற்றிய தகவல் தெரிந்தது. இந்தநிலையில் எனது கணவரை மறந்துவிட வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் எனது சாதி பெயரை சொல்லி அவர்கள் இழிவாக பேசினார்கள். இதுகுறித்து அறச்சலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். விசாரணையில், என்னை திருமணம் செய்யவில்லை என்று கவின்குமார் மறுத்துவிட்டார். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.
மனு கொடுக்கும்போது அருந்ததியினர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் என்.ஆர்.வடிவேல் உள்பட பலர் உடனிருந்தனர்.