5 அரசு பள்ளிகளுக்கு கணினி, பீரோ உள்ளிட்ட பொருட்கள் முதன்மை அமர்வு நீதிபதி வழங்கினார்


5 அரசு பள்ளிகளுக்கு கணினி, பீரோ உள்ளிட்ட பொருட்கள் முதன்மை அமர்வு நீதிபதி வழங்கினார்
x
தினத்தந்தி 25 July 2018 4:00 AM IST (Updated: 25 July 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் 5 அரசு பள்ளிகளுக்கு கணினி, பீரோ உள்ளிட்ட பொருட்களை முதன்மை அமர்வு நீதிபதி வழங்கினார்.

பெரம்பலூர்,

தேசிய சட்டப்பணிகள் ஆணையக்குழு நிதியிலிருந்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள 5 பள்ளிகளுக்கு கணினி, பீரோ, மேஜை, நாற்காலிகள், சட்டப்புத்தகங்கள் வழங்க உத்தரவாகி உள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் பெரம்பலூர், அரும்பாவூர், செட்டிகுளம், பாடாலூர், குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளிகளுக்கு மேற்படி பொருட்கள் வழங்கும் விழா பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பாலராஜ மாணிக்கம் தலைமை தாங்கினார்.

பின்னர் அவர் 5 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் கணினி, பீரோ, மேஜை, நாற்காலிகள், சட்டப்புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கினார். இதில் பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த், தலைமை நீதித்துறை நடுவர் முரளிதரன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருள்மொழி தேவி மற்றும் நீதிபதிகள், அரசு வக்கீல்கள், வக்கீல்கள் சங்கம், அட்வகேட்ஸ் அசோசியேசன் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவின் செயலாளருமான வினோதா வரவேற்றார். முடிவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார். 

Next Story