100 நாள் திட்டத்தில் வேலை வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்
விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம் நேற்று திருவண்ணாமலையில் நடந்தது.
திருவண்ணாமலை,
100 நாள் வேலை திட்டத்தில் ‘ஜாப் கார்டு’ உள்ள அனைவருக்கும் வேலை வழங்கக்கோரி நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கணபதி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் நடராஜன், வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் கே.வெங்கடேசன், சர்தார், ஜெயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர் பிரகலநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். முன்னதாக கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும். 100 நாள் வேலையை ‘ஜாப் கார்டு’ உள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும்.
வேலை கேட்டு மனு கொடுக்கும் அனைவருக்கும் 15 நாட்களுக்கு வேலை வழங்க வேண்டும். இல்லையென்றால் வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும். சட்ட கூலி ரூ.224-ல் முழுமையாக வழங்க வேண்டும். 100 நாள் வேலையை ஏரி, குளங்களை, தூர்வார பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பாரி, மாதர் சங்கம் மாவட்ட செயலாளர் லூர்துமேரி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Related Tags :
Next Story