பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 July 2018 4:15 AM IST (Updated: 25 July 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று விவசாய தொழிலாளர் சங்கத்தினர் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி னார். பொருளாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் சந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமையன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் அன்புமணவாளன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார்கள்.

மத்திய, மாநில அரசுகள் 100 நாள் வேலை திட்டத்திற்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு மனுக்கொடுத்த 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டும். வேலை வழங்கவில்லை என்றால், வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும். பெண்களுக்கு தனி வேலை அளவை நிர்ணயிக்க வேண்டும். சட்டக்கூலி ரூ.224-ஐ குறைக் காமல் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் தங்கப்பா, மருதப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு அந்த பகுதியில் திருக்கோகர்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story