பெரியபாளையத்தில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய புகைப்படக்காரர் கைது
பெரியபாளையத்தில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய புகைப்படக்காரர் கைது செய்யப்பட்டார்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பஜார் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருக்கு சுரேஷ்குமார், சதீஷ்குமார், மகேஷ்குமார்(வயது 44) என்று 3 மகன்கள் உள்ளனர். சகோதரர்கள் மூவருக்கும் இடையே குடும்பத்தகராறு தொடர்பாக வீட்டுக்கு வெளியே வந்து நின்று கொண்டு ஒருவர் மீது ஒருவர் குறை கூறி தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த பெரியபாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த புகைப்படக்காரர் மண்ணன் (32) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள குடும்பத்தகராறை வீட்டுக்குள்ளேயே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று 3 பேரையும் எச்சரித்தார்.
இதையடுத்து சகோதரர்கள் மூவரும் எங்கள் பிரச்சினையை நாங்கள் தீர்த்துக்கொள்கிறோம் என்று கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த மண்ணன் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சகோதரர்களை சரமாரியாக தாக்கினார். இதில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் மகேஷ்குமார் படுகாயம் அடைந்தார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இது குறித்து சுரேஷ்குமார் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மண்ணனை கைது செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story