வேலைநிறுத்தம் 5-வது நாளாக நீடிப்பு: தமிழக லாரி உரிமையாளர்களுக்கு ரூ.1,000 கோடி இழப்பு
நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் 5-வது நாளாக நீடித்து வரும் வேளையில், தமிழக லாரி உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் டீசல் விற்பனையும் 60 சதவீதம் வரை குறைந்து உள்ளது.
நாமக்கல்,
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது. இதனால் தமிழகத்தில் மட்டும் சுமார் 4½ லட்சம் சரக்கு வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 கோடி வீதம் 5 நாட்களில் சுமார் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சம்மேளன நிர்வாகிகள் கூறினர். மேலும் டிரைவர், கிளனர் உள்பட லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலைஇழந்து தவித்து வருகின்றனர்.
இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் சரக்கு போக்குவரத்து அடியோடு முடங்கி உள்ளது. வட மாநிலங்களில் இருந்து சிமெண்டு, கட்டுமான பொருட்கள், கோழித்தீவன மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தமிழகம் வருவது தடைப்பட்டு உள்ளது. இது ஒருபுறம் இருக்க உணவு பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் வருகையும் தடைப்பட்டு இருப்பதால், அவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, செயலாளர் தன்ராஜ் ஆகியோர் கூறியதாவது:-
அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் வேலைநிறுத்தம் தொடர்பான அறிவிப்பை கடந்த 2 மாதங்களுக்கு முன்பே வெளியிட்டது. எனவே தமிழகத்தில் உள்ள வணிகர்கள் வடமாநிலங்களில் இருந்து வரும் பூண்டு, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், பெரிய வெங்காயம் போன்றவற்றை வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே இருப்பு வைத்து கொண்டனர். இந்த இருப்பு இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே தாக்குபிடிக்கும். அதன் பிறகு உணவு பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும். எனவே மத்திய அரசு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, எங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
லாரிகள் அதிகம் நிறைந்த நாமக்கல்லில் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக வடமாநிலத்தில் இருந்து சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் மக்காச்சோளம் மூட்டைகள் இறக்கப்படவில்லை.
இதற்கிடையே நேற்று முன்தினம் ரேஷன்அரிசி மூட்டைகளை ஒருபிரிவினர் சரக்கு ரெயிலில் இருந்து லாரிகளில் ஏற்றினர். அதற்கு நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் லோடு ஏற்றிய நிலையில் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் ரெயில்வே பிளாட்பாரத்திலேயே நிறுத்தப்பட்டு உள்ளன.
பொதுவாக லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் நாட்களில் நாமக்கல் பகுதியை சேர்ந்த கோழிப்பண்ணையாளர்கள் சரக்கு ரெயிலில் வட மாநிலங்களில் இருந்து தீவன மூலப்பொருட்களை வாங்கி வருவார்கள். தற்போது சரக்கு ரெயிலில் வாங்கி வந்தாலும், அவற்றை பண்ணைகளுக்கு லாரிகளில் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருவதால், பண்ணையாளர்கள் திணறி வருகின்றனர்.
இதற்கிடையே லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நீடித்து வருவதால் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் டீசல் விற்பனை கணிசமான அளவு குறைந்து உள்ளது.
இது குறித்து நாமக்கல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் மோகன் கூறியதாவது:-
லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கிய நாள் முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 50 முதல் 60 சதவீதம் வரை டீசல் விற்பனை குறைந்து உள்ளது. இதேபோல் நகர்புறங்களிலும் 25 சதவீதத்திற்கு மேலாக டீசல் விற்பனை சரிவடைந்து உள்ளது. இதனால் எங்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story