தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் ஒகேனக்கல்லில் காத்திருப்பு போராட்டம்


தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் ஒகேனக்கல்லில் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 25 July 2018 4:00 AM IST (Updated: 25 July 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நுழைவுவாயில் பகுதியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.

பென்னாகரம்,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜ் அடிக்கல் நாட்டிய ராசி மணல் அணை கட்டுமான பணியை உடனே தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நுழைவுவாயில் பகுதியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை தலைவர் தஞ்சை அண்ணாதுரை, தர்மபுரி மண்டல தலைவர் சின்னசாமி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மாநில துணை செயலாளர் செந்தில்குமார், இளைஞரணி அமைப்பாளர் அறிவு, ஒகேனக்கல் மீனவ விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் முத்தையன், வீரமணி, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு சென்ற பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவினர், பிலிகுண்டுலுவில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக எல்லையை ஒட்டி காவிரி கரையில் ராசி மணல் அணை கட்டும் பணியை கிடப்பில் போடப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

Next Story