விண்வெளி மையத்தில் பயிற்சி வேலைவாய்ப்பு


விண்வெளி மையத்தில் பயிற்சி வேலைவாய்ப்பு
x
தினத்தந்தி 25 July 2018 12:52 PM IST (Updated: 25 July 2018 12:52 PM IST)
t-max-icont-min-icon

விண்வெளி மைய நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 435 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சுருக்கமாக இஸ்ரோ என்று அழைக்கப்படுகிறது. இதன் கீழ் செயல்படும் ஆராய்ச்சி மையங்களில் ஒன்று, சதிஷ் தவான் விண்வெளி மையம் (SDPC). திருவனந்தபுரத்தில் செயல்படும் இந்த விண்வெளி மைய நிறுவனத்தில் தற்போது அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 435 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பிரிவு வாரியாக உள்ள இடங்கள் விவரம் : பிட்டர் - 75, எலக்ட்ரீசியன் - 20, மோட்டார் மெக்கானிக் - 5, டிரேடு அப்ரண்டிஸ் - 42, கெமிக்கல் - 10, சிவில் - 5, ஏர் கண்டிசன் - 10, டீசல் மெக்கானிக் - 4, ஆபீஸ் அசிஸ்டன்ட் - 125, மெக்கானிக்கல் - 17, இ.சி.இ. - 17, மெக்கானிக்கல் -14, இ.சி.இ - 22, இ.இ.இ. - 11, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யயூனிகேசன் 11, சி.எஸ்.இ. - 8, சிவில் 10, கெமிக்கல் - 5, ஆட்டோமொபைல் -3, அக்ரி -5, கேட்டரிங்- 3, போட்டோகிராபி - 1, லைபிரரி சயின்ஸ் - 4, ஏரோனாட்டிகல் -1, நர்சிங் -6, லேப் டெக்னீசியன் -4, கன்ஸ்ட்ரக்சன் டெக்னாலஜி - 4.

விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்...

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 28-7-2018 -ந் தேதியில் 14 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள் என்.டி.சி., ஏன்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. சில பணிகளுக்கு டிப்ளமோ என்ஜினீயர்களும், பட்டதாரி எனஜினீயர் களும் விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு செய்யும் முறை :

கல்வித்தகுதியின் மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு அழைப்புக்கடிதம் அனுப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 28-7-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.shar.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும். 

Next Story