உலகின் முதல் மிதக்கும் ‘ஆர்ட் கேலரி’
கடல் அலைகளில் பாதி மூழ்கிய நிலையில் மிதக்கும், புதுமையான சிற்பக்கூடம் ஒன்று எழுப்பி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் மிதக்கும் ஆர்ட் கேலரி என்ற சிறப்பை பெற்றுள்ளது இந்தகலைச் சிற்பம். சுற்றுச்சூழல் நலம் விரும்பியான சிற்பிஜாசன்டிகாய்ரெஸ் டெய்லர் இந்த சிற்பத்தை உருவாக்கியிருக்கிறார். மாலத்தீவின்பேர்மாண்ட் தீவில் கடலுக்குள் இந்த சிற்பக்கூடம் எழுப்பப்பட்டிருக்கிறது. பவளப்பாறைகள், பூஞ்சைகள் வளரும் சூழலை அதிகரிக்கும் பொருட்டும், அதுபற்றி மக்கள் விழிப்புணர்வு பெறவும் இந்த சிற்பக்கூடத்தை உருவாக்கி உள்ளதாக சிற்பிடெய்லர் கூறுகிறார்.
கடற்கரையில் இருந்துசிறிது தூரம் உள்ளே அமைக்கப்பட்டுள்ள இந்த சிற்பக்கூடத்தை நீச்சலடித்தபடி சுற்றிவந்து ரசிக்க முடியும். 20 அடி உயரத்தில், 500அடி சுற்றளவில்இது அமைந்துள்ளது. நீருக்கு அடியிலும்சில சிற்பங்கள் இருக்கின்றன.இதை கட்டி முடிக்க 9மாத காலம் தேவைப்பட்டது. பிரபலமான சுற்றுலா விடுதி நிறுவனம் இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளைஅழைத்துச் செல்லவும் இருக்கிறார்கள்.
Related Tags :
Next Story