டெல்லியில் இருந்து நெல்லைக்கு வந்த ரெயிலில் 12 எல்.இ.டி. டி.வி.க்கள் திருட்டு போலீசார் தீவிர விசாரணை
டெல்லியில் இருந்து நெல்லைக்கு வந்த ரெயிலில் 12 எல்.இ.டி. டி.விக்கள் திருடப்பட்டன. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை,
டெல்லியில் இருந்து நெல்லைக்கு வந்த ரெயிலில் 12 எல்.இ.டி. டி.விக்கள் திருடப்பட்டன. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் மூலம் எல்.இ.டி. டி.வி.பாளையங்கோட்டை சீனிவாச நகரை சேர்ந்தவர் மகேஷ் (வயது 42). இவர் தனியார் எல்.இ.டி. டி.வி. நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்கள். இவரது நிறுவனத்துக்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் டெல்லியில் இருந்து ரெயில் மூலம் எல்.இ.டி. டி.வி.க்கள் வரும்.
வழக்கம் போல் நேற்று முன்தினம் மகேஷ் நிறுவனத்துக்கு டெல்லியில் இருந்து நெல்லை வரும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் 17 பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு பார்சலில் தலா 2 டி.வி.க்கள் வீதம் மொத்தம் 34 டி.வி.க்கள் இருந்தன. இந்த ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை வந்தது.
12 டி.வி.க்கள் திருட்டுமகேஷ் ரெயிலில் வந்த பார்சல்களை எடுப்பதற்காக ரெயில் நிலையம் வந்தார். நடைமேடையில் இறக்கி வைக்கப்பட்டு இருந்த தனது பார்சல்களை சரிபார்த்தார். அப்போது அதில் 6 பார்சல்கள் உடைக்கப்பட்டு இருந்ததும், அதன் உள்ளே இருந்த 12 எல்.இ.டி. டி.வி.க்கள் திருடப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து மகேஷ் ரெயில்வே பார்சல் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் கேட்டார். அவர்கள் ரெயிலில் வந்த பார்சல்களை அப்படியே இறக்கி வைத்து விட்டதாக கூறினர். இதையடுத்து மகேஷ் நெல்லை ரெயில்வே போலீசாரிடம் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணைடெல்லியில் இருந்து எத்தனை பார்சல்கள் அனுப்பப்பட்டன. அதற்கான ரசீது இணைக்கப்பட்டு இருக்கிறதா? ரெயில் வரும் வழியில் டி.வி.க்கள் திருடப்பட்டதா? அல்லது நெல்லை ரெயில் நிலையத்தில் திருடப்பட்டதா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நெல்லை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டில் ரெயில்வே ஊழியர்கள் உடந்தையாக இருந்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.