தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக உண்ணாவிரத போராட்டம்

தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது  நாளாக உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 26 July 2018 3:00 AM IST (Updated: 25 July 2018 7:01 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2–வது நாளாக பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2–வது நாளாக பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கை

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் 1–1–17 முதல் ஊதிய மாற்றம் வழங்க வேண்டும், அன்று முதல் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் வழங்க வேண்டும். ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தை அடிப்படையாக கொண்டு ஓய்வூதிய பங்கு தொகை வழங்க வேண்டும். 4ஜி சேவை வழங்க அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்ணாவிரதம்

அதன்படி தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று 2–வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதத்துக்கு அனைத்து ஊழியர், அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் முருகபெருமாள் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பாலகண்ணன், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயமுருகன், சஞ்சார் நிகாம் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மரியஅந்தோணிபிச்சை, செல்வக்குமார் மற்றும் ஓய்வூதியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story