அ.ம.மு.க. ஜெங்கின்ஸ் பொறுப்பேற்பு: அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை


அ.ம.மு.க. ஜெங்கின்ஸ் பொறுப்பேற்பு: அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 26 July 2018 4:15 AM IST (Updated: 25 July 2018 8:40 PM IST)
t-max-icont-min-icon

அ.ம.மு.க. மேற்கு மாவட்ட செயலாளராக டி.ஜெங்கின்ஸ் பொறுப்பேற்ற பின், தக்கலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

குமாரபுரம்,

குமரி மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அ.ம.மு.க.) ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் இருந்தார். இந்தநிலையில் குமரி மாவட்டத்தை இரண்டாக பிரித்து கிழக்கு மாவட்ட செயலாளராக கே.டி.பச்சைமாலையும், மேற்கு மாவட்ட செயலாளராக டி.ஜெங்கின்சையும் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நியமித்தார்.

புதிதாக பொறுப்பேற்ற பிறகு மேற்கு மாவட்ட செயலாளர் டி.ஜெங்கின்ஸ் திரளான நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று தக்கலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மேலும் எம்.ஜி.ஆர். சிலையின் கீழ் ஜெயலலிதா உருவபடம் வைத்து மாலையும் அணிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வக்கீல் அணி செயலாளர் சவுந்தர்ராஜ், மேல்புறம் ஒன்றிய செயலாளர் கே.ஜி.உதயகுமார், கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் மார்ட்டின் ஜோஸ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் ராஜா டைட்டஸ், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் மாதேசன், திருவட்டார் தெற்கு ஒன்றிய செயலாளர் ‌ஷபின், வடக்கு ஒன்றிய செயலாளர் குற்றியார் நிமல், பத்மநாபபுரம் நகர செயலாளர் குமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் தேவதாஸ், மாவட்ட விவசாய அணி செயலாளர் தர்மராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜெயசேகர், ராஜா ஜோயல், பிரதீஷ்குமார், பென்ராஜசிங், ரமேஷ்குமார், முஞ்சிறை ஒன்றிய செயலாளர் விஜயகுமார், குழித்துரை நகர செயலாளர் பிரசன்னகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story