ஒகி புயலில் சிக்கி மீண்டு வந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை
ஒகி புயலில் சிக்கி, மீண்டு வந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
நாகர்கோவில்,
தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில், தெற்கு எழுத்தாளர் இயக்க வக்கீல் திருத்தமிழ் தேவனார், சமூக ஆர்வலர் ஜெயசுந்தரம், சமம் குடிமக்கள் இயக்க மாவட்ட பொருளாளர் கடிகை ஆண்டனி, விளிம்புநிலை மக்கள் குரல் ஒருங்கிணைப்பாளர் சரவணபவன் மற்றும் மீனவர்கள் குடும்பத்தினர் இணைந்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
குமரி மாவட்டத்தில் 29–11–2017 மற்றும் 30–11–2017 தேதிகளில் ஒகி புயல் தாக்கியது. இதில் 29 விசைப்படகுகளும், நூற்றுக்கு அதிகமான நாட்டு படகுகளும் கடலில் மூழ்கியது. இந்த புயலில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 161 பேரும், தூத்துக்குடி, நாகப்பட்டினம், கடலூர் பகுதிகளை சேர்ந்த 200–க்கு அதிகமானவர்களும் கடலில் மூழ்கி இறந்தனர்.
சில மீனவர்கள் 2 நாட்கள் முதல் 4 நாட்கள் வரை தத்தளித்து மீண்டு கரை சேர்ந்தனர். அந்த மீனவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவித்த அரசு 7 மாதங்கள் ஆகியும் இதுவரை வழங்கவில்லை.
அரசு வாக்களித்த ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகை கிடைக்கப் பெறாத நிலையில் மீனவர்கள் வறுமையில் வாடுகின்றனர். உடலும், உள்ளமும் பலகீனமடைந்து மீண்டும் கடலுக்கு செல்ல இயலாதநிலையில் உள்ளனர். ஆகவே அரசு, ஒகி புயலில் சிக்கி மீண்டுவந்த மீனவர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்கி மீனவர் குடும்பங்களை வாழ வைக்க வழிவகை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.

Related Tags :
Next Story