பள்ளிவேனில் நூதன முறையில் மணல் கடத்தல் அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்
கும்பகோணம் அருகே நூதன முறையில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பள்ளி வேனை உதவி கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம்கும்பகோணம் பகுதியில் உள்ள காவிரி ஆறு, அரசலாறு, குடமுருட்டி, திருமலை ராஜன் ஆறு ஆகிய ஆறுகளில் இருந்து மணல் கடத்தப்படுவதை தடுக்க கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாரிகளின் கெடுபிடியால் மணல் கடத்த முடியாமல் தவித்த கடத்தல்காரர்கள் தற்போது யாருக்கும் சந்தேகம் வராத வகையில் பல நூதன திட்டங்களை வகுத்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் ஆற்றில் இறங்கி மணலை சாக்குமூட்டைகளில் கட்டி இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்று குறிப்பிட்ட விலைக்கு விற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கும்பகோணம் குடமுருட்டி ஆற்று பகுதியில் இரவு நேரத்தில் ஒரு தனியார் பள்ளி வேன் சந்தேகத்துக்குரிய வகையில் வந்து செல்வதாக கும்பகோணம் உதவி கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த வேனை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட வேன் டிரைவர் அதிகாரிகளின் கண்ணில் சிக்காமல் மாற்றுப்பாதையில் தப்பி செல்வது வாடிக்கையாக இருந்தது.
எனவே அந்த வேனை மடக்கி பிடிக்க உதவி கலெக்டர் தலைமையில் தாசில்தார் வெங்கடாசலம், வருவாய் ஆய்வாளர் பிரபு, கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளி வேனை மடக்கி பிடிக்க திட்டம் வகுக்கப்பட்டது. இதன்படி இந்த குழுவினர் நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் அருகே உள்ள வலங்கைமான் பூண்டியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் அரசு ஜீப்பை நிறுத்திவிட்டு சாதாரண கிராம மக்கள் போல கைலி சட்டையுடன் மணல் கடத்தல் நடைபெறும் தில்லையம்பூர் குடமுருட்டி ஆற்றங்கரையோர பகுதியில் பதுங்கியிருந்தனர்.
அப்போது கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி வேன் குடமுருட்டி ஆற்றின் கரை பகுதிக்கு வந்து நின்றது. அந்த வேனில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் 10 பேர் ஆற்றில் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த சாக்கு பையில் மணலை துரித வேகத்தில் அள்ளி நிரப்பி மூட்டைகளாக கட்டி பள்ளி வேனில் ஏற்றினர். உடனே அதிகாரிகள் மெல்ல வேனின் அருகே நெருங்கி சென்று மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடிக்க முயன்றனர்.
அப்போது அதிகாரி ஒருவரின் செல்போனில் இருந்த டார்ச்லைட் திடீரென எரிந்தது. திடீரென டார்ச் லைட் வெளிச்சம் பட்டதால் சுதாரித்துக்கொண்ட கடத்தல்காரர்கள் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். வேன் டிரைவர் வேனை பூட்டி விட்டு ஓட்டம் பிடித்தார். ஆனால் அதிகாரிகள் விடாமல் அவர்களை விரட்டி சென்றனர்.
இதில் தில்லையம்பூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் கருணாநிதி என்பவர் மட்டும் அதிகாரிகளின் பிடியில் சிக்கினார். அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வலங்கைமான் வரதராஜன்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தனியார் மெட்ரிக் பள்ளி வேன் டிரைவர் வைரமுத்து(வயது28) என்பவர் இந்த மணல் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
மேலும் இவர் ஏற்கனவே மணல் லாரி டிரைவராக இருந்த போது மணல் திருட்டில் ஈடுபட்டு அதிகாரிகளிடம் சிக்கியவர் என்ற தகவலும் அதிகாரிகளுக்கு கிடைத்தது. பள்ளி வேன் டிரைவர் வைரமுத்து காலை, மாலை நேரங்களில் வேனில் பள்ளி மாணவர்களை அழைத்து சென்ற பின் இரவில் வலங்கைமானில் ஒரு மறைவான இடத்தில் வேனை நிறுத்தி விட்டு நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் மணல் கடத்தல்காரர்களுடன் சேர்ந்து ஆற்றில் இருந்து மணல் கடத்தி விற்பனை செய்தது தெரியவந்தது. இவருக்கு தில்லையம்பூரை சேர்ந் லோடுமேன் முருகேசன் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். தற்போது கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஆற்றில் வர உள்ளதால் ஒரே நேரத்தில் 150 மூட்டை மணலை அள்ளியதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து உதவி கலெக்டர் பிரதீப்குமார், கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி மற்றும் பட்டீஸ்வரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பள்ளி வேனை பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்லும் வேன் மூலம் மணலை திருடி விற்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story